நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: 2ஆவது சுற்றில் அர்ஜெண்டினா

தோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் 2ஆவது சுற்றுக்கு அர்ஜெண்டினா அணி முன்னேறி உள்ளது.

சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணி போலந்தை எதிர்கொண்டது. 

முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 46ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 

பின்னர் 67ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜெண்டினா வெற்றியை உறுதி செய்தார். 

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

இதனால் அர்ஜெண்டினா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் போலந்து அணியினரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset