நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் பொது சிவில் சட்டம் எப்போது?: அமித் ஷா பதில்

புது டெல்லி:

ஜனநாயக ரீதியிலான அனைத்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகே இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாகும். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபையும் அறிவுரை வழங்கியிருந்தது. மதச்சார்பற்ற ஒரு தேசத்தில், மதங்களின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது.

பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜகவைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை. இந்த விவகாரத்திலும் வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம்.

பாஜக ஆளும் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவர்களிடம் இருந்து இக்குழுக்கள் கருத்துகளை பெற்று வருகின்றன. இந்த நடைமுறையில் கிடைக்கப் பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமித் ஷா.

தொடர்புடைய செய்திகள்

+ - reset