நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். 

இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். 

மேலும், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று மதியம் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என கமல்ஹாசன் தரப்பினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset