நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினாவை அதிரடியாக வீழ்த்தியது சவூதி அரேபியா 

தோஹா:

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து பார்க்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. 

இந்தத்தொடரில் இன்று அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். 

ஆட்டத்தின் 15 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனைச் சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். 

முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. 

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் சவுதி அரேபியா வீரர்கள் துடிப்புடன் ஆடினார்கள். சீறிப்பாய்ந்த சவூதி அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் சலேம் அல்தாவசாரி 53ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 

இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் 2-1 என சவுதி அரேபியா அணி அதிரடியாக வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset