நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நீரிழிவு மலேசியாவிற்கு மிகப் பெரிய சுமை; மக்கள் நலன் கருதி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி ப சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் தினந்தோறும் 20 தேக்கரண்டி சீனியை உட்கொள்கிறார்கள்.
எடுக்க வேண்டியது 5 தேக்கரண்டி மட்டும்தான்.

மலேசியாவில் 6 மில்லியன்(60 லட்சம்) நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இது கவலை தருகிறது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹைதீன் அப்துல் காதர்.

மலேசியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதால் ஆசியா வட்டாரத்தில் நீரிழிவு நோயாளிகளின் பட்டியலில் மலேசியா முதலிடம் வகிப்பது மிகப் பெரிய அளவில் கவலை தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி ஒவ்வொருவருக்கு ஒரு நாளைக்கு 5 தேக்கரண்டி சீனிதான் தேவை என அறிவித்துள்ளது. ஆனால், மலேசியர்கள்  ஒவ்வொரு நாளும் 20 தேக்கரண்டி சீனி உட்கொள்வது கவலையை தருவதாக முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.

இதனால் 5 மலேசியர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

மலேசியாவில் ஏறக்குறைய 60 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் நீரிழிவு நோய்க்கு அதிக அளவில் பணத்தை செலவிடுவதாக முஹைதீன் தெரிவித்தார்.
ஆறு சுவையை மறந்துவிட்டு  வெறும் இனிப்பை மட்டுமே மலேசியர்கள் உண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், மலேசியர்கள்  வாரத்திற்கு 140 தேக்கரண்டியும் (700) கிராம், மாதத்திற்கு 600 தேக்கரண்டி அதாவது 3 கிலோ சீனியை மலேசியர்கள் உண்பது என்பது கவலைப்படக்கூடியது என அவர் கூறினார்.

 உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பும் நவம்பர் 14 ஐ உலக நீரிழிவு தினமாக அறிவித்துள்ளது.

மலேசியாவில், நீரிழிவு நோய்க்கு எதிரான  பிரச்சாரங்கள் செய்தபோதிலும், அதன் பரவலானது குறிப்பாக இரண்டாவது வகையின்  விகிதம்  அதிகரித்து வருகிறது.

தற்போதைய மக்கள்தொகையான 33 மில்லியனில்  18.3 சதவிகிதம் பேர் நீரிழிவால் பாதிக்கப்படுள்ளனர்.

வழக்கமான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக மலேசியாவில் நீரிழிவு நோய் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூங்க வேண்டிய நேரத்தில் உண்பது., உண்ண வேண்டிய நேரத்தில் உணவை தவிர்ப்பது, அதிக அளவில் இனிப்பான சுவை பானங்களை குடிப்பது போன்ற பழக்கங்கள் நீரிழிவுக்கு காரணமாக திகழ்கிறது. 

மேலும் தற்போது ஐந்து, ஆறு வயதுடைய குழந்தைகள் இரண்டாவது வகை  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் முக்கிய காரணியாக இருப்பதால், மலேசியர்களிடையே நீரிழிவு நோயின் அதிகரிப்பைக் குறைக்க உடல் பருமனை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி  அதிக வயது வந்தோருக்கான உடல் பருமன் விகிதம் கொண்ட ஆசிய நாடுகளில் மலேசியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர்.

நீரிழிவு நோய் வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதாரச் செலவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கிறது.

மலேசியாவில் நீரிழிவு நோயினால் ஏற்படும் வருடாந்திர நேரடி மருத்துவச் செலவுகள்  மவெ 4.93 பில்லியன்.

இது  227 சதவீதம் அதிகமாகும். புற்றுநோய் (மவெ 1.34 பில்லியன்), இருதய நோய் (மவெ 3.90 பில்லியன்) 

வருடாந்திர சுகாதாரச் செலவில் ஒவ்வொரு ரிங்கிட்டிலும், 45 சென் நீரிழிவு நோய்க்கு செல்கின்றது.

மலேசியாவில் நீரிழிவின் தாக்கத்தின் விகிதம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உயர்ந்துள்ளது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின்  கைகால்களையும் (துண்டிப்பு), கண்பார்வை (குருட்டுத்தன்மை), சிறுநீரகம் (தோல்வி), இதயம் (செயலிழப்பு), நரம்பு (சேதம்) ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

நவம்பர் 14 உலக நீரிழிவு தினமாக இருப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்குமாறு பயனீட்டாளர்களுக்கு பி.ப.சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

எனவே, பயனீட்டாளர்கள்  ஆரோக்கியமான உடல் எடையை அடைய அல்லது பராமரிக்க தயாராக வேண்டும். 

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள் - பெரும்பாலான நாட்களில் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வழக்கமான, மிதமான-தீவிர செயல்பாடுகள் தேவை.

சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புகைபிடித்தல், நீரிழிவின் இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள், குறிப்பாக குளிர்பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் நீரிழிவை குறைக்கலாம்.

நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கான மலிவான மற்றும் ஆரோக்கியமற்ற மாற்றான High Fructose Corn Syrup யை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும்.

 உற்பத்தியாளர்கள் தங்கள் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெளிவாகக் குறிப்பிடுவதற்கு லேபிள்களை மாற்ற வேண்டும்.

தொலைக்காட்சியில் அதிக சர்க்கரை மற்றும் பிற குப்பை உணவுகள் மற்றும் பானங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்

பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்க ஆசைப்படாமலிருக்க பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகள் விற்பனை செய்வதையும், பள்ளிகளைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும். 

மருத்துவமனைகள், விமான நிலையங்கள், பள்ளிகள் போன்ற பகுதிகளிலிருந்து நொறுக்குத் தீனிகள் மற்றும் சர்க்கரை பானங்களை வழங்கும் விற்பனை இயந்திரங்களை அகற்ற வேண்டும். 

அதற்கு பதிலாக இந்த இடங்களில் தண்ணீர் வழங்கும் இயந்திரங்களில் குடிநீர் வழங்க வேண்டும்.

நீரிழிவு நோயின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெகுஜன ஊடகங்களில் ஒரு பெரிய பிரச்சாரத்தைத் சுகாதார அமைச்சு  தொடங்க வேண்டும்.  

பருமனாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக உடல் செயல்பாடுகளில் ஈடுபட மக்களுக்கு ஊக்குவிக்க பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, உணவுக் கடைகளுக்கு 24 மணிநேர உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என மிகக் கவலையுடன் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset