நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இது தேர்தல் காலம்; உங்களை இறைவனும் மன்னிக்க மாட்டான்..! - வெள்ளிச் சிந்தனை

இது தேர்தல் நேரம்.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் தேர்தல் களத்தில் தவறான கருத்துகளையும் அவதூறான விஷயங்களையும் சகட்டு மேனிக்கு சொல்கிறார்கள்.

பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் குறித்து இஸ்லாம் கூறுவதைப் பாருங்கள். அதிர்ந்து போவீர்கள்.

அபூஸயீத்(ரலி), ஜாபிர்(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:

அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்:

'புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான குற்றம் ஆகும்’.

நபித்தோழர்கள் வினவினார்கள்: ‘இறைத்தூதரே! புறம் பேசுவது எப்படி விபச்சாரத்தை விடக் கடுமையான குற்றம் ஆகும்?’.

அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார். பிறகு இறைவனிடம் மீண்டு பாவமன்னிப்புக் கோருகின்றார். இறைவனும் அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றான்.’

இன்னொரு அறிவிப்பில், ‘பிறகு அவன் இறைவனிடம் மீண்டு பாவமன்னிப்புக் கோருகின்றான். இறைவனும் அவனை மன்னித்துவிடுகின்றான். ஆனால் ஒருவன் புறம் பேசினாலோ அவன் எவரைக் குறித்து புறம் பேசினானோ அவர் அவனை மன்னிக்காத வரை இறைவனும் அவனை மன்னிப்பதில்லை’ என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில் பதிவாகியுள்ள வாசகங்கள் வருமாறு: நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘விபச்சாரத்தில் ஈடுபடுபவன் தவ்பா செய்கின்றான். புறம் பேசுபவனுக்கோ பாவமன்னிப்பு இல்லை’.

நூல் : பைஹகி

இங்கு குறிப்பிடப்பட்ட மூன்று அறிவிப்புகளையும் பைஹகி அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

விபச்சாரம் செய்வதை விடக் கடுமையான குற்றம்தான் புறம் பேசுவது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஏனெனில் புறம் பேசுபவர்கள் பெரும்பாலும் அதனை மிகச் சாதாரணமான குற்றம் என்றே நினைத்துக்கொள்கின்றார்கள்.

இதனால் அவர்கள் தங்களின் அந்தச் செயல் குறித்து வெட்கப்படுவதுமில்லை; இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை.

ஆனால் விபச்சாரம் செய்தவனோ திண்ணமாக தன்னுடைய அந்தச் செயல் குறித்து வெட்கப்படுகின்றான்; ஒரு கட்டத்தில் தன்னைத்தானே நொந்துகொள்கின்றான்; இறைவனிடம் பாவமன்னிப்பு கோருகின்றான். மன்றாடுகிறான்.

‘புறம் பேசுபவனுக்கு பாவமன்னிப்பு இல்லை’ என்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில், பாவமன்னிப்பு கோருகின்ற நற்பேறு புறம் பேசுபவனுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை. 

ஏனெனில், புறம் பேசுவது எந்த அளவுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்கிற உணர்வு அவனுக்கு இருப்பதில்லை.

அதுமட்டுமல்ல, அப்படியே புறம் பேசுபவன் பாவமன்னிப்பு கோரினாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை.

ஏனெனில், எவரைக் குறித்து அவன் புறம் பேசினானோ அந்த மனிதர் அவனை மன்னிக்காத வரையில் அவனுடைய அந்த பாவமன்னிப்பு கோரிக்கையை இறைவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset